திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் சிலை சிற்பம் பணி செய்வதற்கு குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் மகன் முனிரத்தினம்(56)என்பவர் வெங்களாபுரம் பகுதிக்கு வந்துள்ளார். பள்ளியின் அருகாமையில் கோவில் வேலை செய்யும் பணியை அரசு பள்ளி சிறுமி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முனிரத்தினம் சிறுமியை அழைத்து பேட் டச் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமையின் தாயார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது முனியம்மாள்) திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட கிராமிய போலீசார் முனிரத்தினத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துதனர். 2ம் வகுப்பு படித்து வரும் அரசுப்பள்ளி சிறுமிக்கு சிலை சிற்பி பாலியல் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது…