2மாதமாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்று ஆமதாபாத்தில் நடப்பதாக இருந்தது. சென்னை அணி எந்த மைதானத்தில், எந்த அணியுடன் மோதினாலும் அங்கே சிஎஸ்கேவின் மஞ்சள்படை ரசிகர்கள் திரண்டு வந்து விடுவார்கள். சாதாரண போட்டிக்கே திரளும் மஞ்சள்படை வீரர்கள், இறுதிப்போட்டியை விட்டு விடுவார்களா என்ன,? நேற்றும் ஆமதாபாத்தில் திரண்டனர்.
ஆனால் மழை வந்து நேற்றைய போட்டியை தடுத்து விட்டது. இரவு 11 மணி அளவில் போட்டி போட்டி ரத்து செய்யப்படுவதாகவும் நாளை(இன்று) நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து சென்ற மஞ்சள்படை ரசிகர்கள், ஆமதாபாத் ரயில் நிலையத்திலேயே இரவில் நிம்மதியாக தூங்கினர். இன்று போட்டியை வெற்றிகரமாக முடித்து கோப்பையுடன் தான் வருவோம் என்ற வைரக்கியத்துடன் இருப்பதாக அவர்கள் கூறினர்.