தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பள்ளி, கல்லூரிகளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.3) பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்..
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்..
திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, ராணிப்பேட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் (ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும்)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகள் காரணமாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு.. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக தலைவர் தகவல்..