Skip to content

பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லால்குடி அருகே 8 ம் வகுப்பு மாணவி. இவரது தாய் வசந்தா. இதே பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்பவர் பெட்டிக்கடை வைத்து இருந்தார். இவரது சித்தி சுதா. கடந்த 2022 ம் ஆண்டு ஜுன் மாதம் பெட்டிக்கடைக்கு வந்த மாணவியிடம் விஜய் நைசாக பேசி அவரது செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, மாணவியின் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்ட விஜய், நான் உன்னை காதலிப்பதாக தெரிவித்தார். ஒரு கட்டத்தில் மாணவியும்   தனது காதலை விஜய்யிடம் கூறினார். இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, தனது மகளின் உடலில் மாற்றங்களை கண்ட மாணவி தாய் வசந்தா, அவரை அருகில் உள்ள  ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட வசந்தா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மகளிடம் கேட்டதற்கு விஜய்யுடன் பழகியதை மகள் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் வீட்டுக்கு சென்ற வசந்தா, விஜய்யின் சித்தி சுதாவிடம் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவரோ, ரூ. 2 லட்சம் பணத்தை வசந்தா, அவரது கணவர் ஆகியோரிடம் கொடுத்து பஞ்சாயத்து பேசி முடித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வசந்தா மற்றும் சுதா ஆகியோர் சேர்ந்து கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்தனர். இதுகுறித்து மாணவி லால்குடி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை விஜய், அவரது சித்தி சுதா, மாணவி தாய் வசந்தா ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3  பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!