Skip to content

ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெட்டியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் தர்மதுரை (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான விக்னேஷ் (22), வீரமணி (18) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில், தர்மதுரை ஓட்ட மற்ற இரண்டு பேரும் பின்னால் அமர்ந்து, பிச்சனூர் – வெட்டியார்வெட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி செல்லும் வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் தர்மதுரை, விக்னேஷ், வீரமணி ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் தர்மதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த, ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தர்மதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த விக்னேஷ், வீரமணி ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!