Skip to content
Home » ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

  • by Senthil

.

அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் அவரவர்கள் வீட்டில் இறக்கி விட  நேற்று  மாலை சென்றது. பள்ளி வாகனத்தை அரியலூர் வாலாஜாநகரத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம்(67) என்பவர் ஓட்டி சென்றார். பள்ளி வாகனம் வெண்மான்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் ஐந்து பேர் காயம் அடைந்தனர். பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் வைசாந்த் (7),யுகேஜி பயிலும் வெங்கடேசன் மகள் வர்ணிஷா(5), 5 ம் வகுப்பு பயிலும் ஞானசேகரன் மகன் ஹேம்நாத் (9), தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்த
நான்காம் வகுப்பு பயிலும் குமார் மகன் கிரிலக்சன் (9), அதே ஊரை சேர்ந்த 4ம் வகுப்பு  மாணவி மகேந்திரன் மகள் நக்ஷத்திரா(9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகள் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி வேன் கவிழ்ந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!