பெரம்பலூரில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழியில் நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி,குன்னுமேடு பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, சரியாக பள்ளிக்கு செல்ல வேண்டும். இதைக் கேட்ட மாணவர்கள் நாங்கள் நன்றாக படித்து அரசு அதிகாரிகளாக வருவோம் என தெரிவித்தனர்.நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பஸ்சில் செய்யும் போது கவனமாக இருக்கவும் , படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லவும் கூடாது எனவும் அறிவுரை கூறினார். இந்நிகழ்வில் டாக்டர் வல்லவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
