கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி முதல் டிசம்பர் வரை கொலை,ஆதாய கொலை,திருட்டு, கொள்ளை,நகை பறிப்பு,சிற்றார்க்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள்,போதைப் பொருட்கள் விற்பனை,மது விற்பனை,குண்டர் தடுப்பு சட்டம்,சூதாட்டம் மற்றும் செல்போன் திட்டம் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது 7519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8543 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 கொலை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 60 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டதாகவும் 349 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 469 குற்றவாளிகளை கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து 33,17,900 மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்ததாக கூறினார்.420 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு
433 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 35,21,760 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.சட்டவிரோதமாக லாட்டரியில் ஈடுபட்ட 355 குற்றவாளிகள் மீது 329 வழக்கு பதிவு செய்து செய்ததாகவும் சட்ட விரோதமான சூதாட்டத்தில் ஈடுபட்ட 1127 குற்றவாளிகள் மீது 222 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.569 திருட்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட 415 திருட்டு குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 4.78,07,140 ரூபாய் திருட்டு சொத்துகளை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிராக 153 பாலியல் குற்றவாளிகள் சம்பந்தமாக 120 குற்றவாளிகள் மீது பழக்குப்பதிவு செய்யப்பட்டு 134 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்சோ வழக்கில் 10 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். கோவை மாவட்டத்தில் திருட்டு போன சுமார் 1,37,83,500 ரூபாய் மதிப்பிலான 711 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளிக்கூடம் 2.0 திட்டத்தின் கீழ் 687 பள்ளிகளில் 46,884 மாணவிகளுக்கு 1302 வகுப்புகளில் மூலம் பள்ளி மாணவிகளுக்கு தங்களை தாக்கு வரும் கயவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.