Skip to content

பள்ளி குழந்தைகள் கண்களில் கருப்புத் துணி கட்டி சிலம்பாட்டம்….

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி குழந்தைகள் பரதநாட்டியம், கபடி, சிலம்பாட்டம்என பாரம்பரிய விளையாட்டுகள் தற்காப்பு கலைகளும் கற்று வருகின்றனர்,இதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ரௌத்திரம் பயிற்சி பற்றி மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடுமலை சாலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் சிலம்பாட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்களது கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு சிலம்பாட்டம் ஆடி விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா துவக்கி

வைத்தார், சோழன் உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமலன் கூறுகையில் தற்போது பள்ளி குழந்தைகள் மொபைல் போனில் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் இதனால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் கண்கள் பாதிப்பு ஏற்படுகிறது இதை தடுக்கும் விதமாக 100 பேர் ஐந்து கிலோ மீட்டருக்கு சிலம்பாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனைக்கு முயற்சிக்கு ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்,இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் ஜெகதீஸ்வரன், குழந்தைகளின் பெற்றோர்கள் உடன் இருந்தனர், மேலும் கிழக்க காவல் நிலையா ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!