அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் எதிரே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் உணவு அருந்தும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று, அப்பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலாவாக வந்து கோவிலின் அழகு மற்றும் ராஜேந்திர சோழனின் பெருமைகளை பார்த்து ரசித்தனர். பின்னர் மதிய உணவு அருந்துவதற்காக மாணவர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்த போது, கோவில் வளாகத்தில் உணவருந்தக் கூடாது என கோவில் நிர்வாகத்தினர்
கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள் கோவில் எதிரே உள்ள குளக்கரையில் சுகாதாரமற்ற குப்பை கூலமாக இருந்த சாலை அருகில் அமர்ந்தும், குளக்கரையின் கட்டை சுவரில் நின்றவாறும் உணவருந்தினர். அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.