கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில், அவரது உறவினர் பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் கோகுல் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. அலறி அடித்து ஓடிய மாணவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது கோகுலின் உறவினர் ஒருவர், கடித்த பாம்பை அடித்து பையில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
