கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 11ம் வகுப்பு மாணவன் ஜீவா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் மாணவன் ஜீவா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டான். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.