Skip to content

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார் இது குறித்து சிறுமி தான் படித்த தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் உடற் கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ்(52) என்பவரிடம் இது குறித்து புகார் செய்தார். ஹெரால்டு சகாயராஜ் இதனை விசாரிப்பது போல தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் இது குறித்து விசாரிக்க தாமதப்படுத்தியதால் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணில் புகார் அளித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து முன்னதாக காதலித்து சிறுமியை பலவந்தப்படுத்திய அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!