அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகள் பள்ளி முதல்வர் உர்சலா சமந்தா தலைமையில் நடைபெற்றது. இதனை பள்ளி தாளாளர் ரோச் அலெக்சாண்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் . இதில் மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு வரை நடைபெற்ற
போட்டியில் அனைத்து மாணவ, மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் ஓட்டப்பந்தயம், வாலிபால், கொக்கோ, எரி பந்து, கூடை பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிறைவி விழாவை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றி பேரணி வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜசோமசுந்தரம், தாசில்தார் துரை, போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். முன்னதாக தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்றி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.