Skip to content
Home » நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது…. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கூடங்களில் கல்வி கற்றவர்கள் இன்று வெவ்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். உள்ளூரில் கற்ற கல்வி மூலம் கிடைத்த அறிவை பயன்படுத்தி இன்று கைநிறைய ஊதியம் பெற்று குடும்பத்தில் நல்லமுறையில் பேணி வரும் பழகியிருக்கிறீர்கள்.  உங்களில் பலரும் நல்ல நூல்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொண்டிருக்கலாம். இன்று புத்திசாலிகளாக அறிவாளிகளாக இன்று இருப்பதற்கு உங்களிடம் நல்லிழம்புகள் வளர்வதற்கு நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு உதவியிருக்கும். இன்று நாம் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் நாம் கற்ற கல்வி நம்மில் பலர் அரசு பள்ளிகளிலேயோ , அரசு உதவி பெறும் பள்ளிகளிலையோ  படித்திருக்கலாம். ஊரில் நாம் படித்த பள்ளி எப்படி இருக்கிறது என உங்களுக்கு அவ்வபோது யோசனை வந்தது என்றால் ஊருக்கு செல்லும்போது நாம் எத்தனை பேர் நாம் படித்த பள்ளிக்கு செல்கிறோம்.

இந்த பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் சொந்த ஊருக்கு செல்வதே அறிதாகிவிட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்கு சென்று பார்வையிடுவதற்கான நேரம் கிடைப்பது கடினமே. ஆனாலும் நாம் படித்த பள்ளியை நாம் கைவிடலாகாது.  உங்கள் ஊருக்கு செல்லும்போது மறக்காமல் அடுத்த முறை பயின்ற பள்ளிக்கு சென்று பார்க்க முயலுங்கள். உங்கள் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்னினாலோ , இப்போது படிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவ எண்ணினாலோ, பள்ளிக்கு வேறு ஏதேனும் ஒரு வகையில் தொண்டாற்ற எண்ணினாலோ உங்கள் பள்ளி தலைமையாசிரிரை அணுகவும். சொந்த ஊர்களுக்கு வர நேரமில்லை என்றாலோ , அல்லது வௌிநாடுகளில் இருந்தாலோ உங்கள் பள்ளிக்கு உதவலாம். அதற்காகவென்றே ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://nammaschool.tnschools.gov.in/#/alumini . இதில் பதிவு செய்து கொள்ளலாம். கீழ்கண்ட இணையதள முகவரியில் உங்களை பற்றிய விவரங்களை பதிவிடவும். உங்களை போலவே பலரும் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பள்ளியிலும்,வகுப்பிலும் உடன் படித்த நண்பர்களின் விவரங்களையும் விரைவில் அத்தளத்தில் காணலாம். இதன்மூலம் வாரியத்தில் ஒன்றாக ஓடியாடி விளையாடிய மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களோடு தொடர்பை உருவாக்கிக்கொள்ளலாம். உங்கள் வகுப்பு நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து பள்ளிக்கு உதவலாம். அல்லது தனி நபராகவும் உதவலாம். பள்ளிக்கூடம் என்பது நம் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கம் என்பதை நீங்கள் அறியலாம். அத்தகைய பள்ளிக்கூடத்திற்கு உங்களால் இயன்றதை செய்ய தமிழ்நாடு அரசு உங்களை அழைக்கிறது. வாருங்கள் . என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *