சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆசிரியர் கருத்தரங்கில் பேச்சு…
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் கல்வி கழகம் சார்பில் ஆசிரியர்களுக்கான கல்வி திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் இன்று
டி யி எல் சி தரங்கை வாசத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் தரங்கை அத்தியட்சர் மறைதிரு.கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சாதனையாளர்களுக்கான பரிசுகளை வழங்கி சிறப்பறையாற்றினார்.
அதில்,
தமிழகத்தை பொறுத்தவரை தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இதுவரை மொத்தம் 51 திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறைக்காக குறிப்பாக மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாவட்டம் தோறும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனடியாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே எப்போதும் இந்த அரசு உங்களுக்கானதாக இருந்து செயல்படும் குறிப்பாக மாணவர்களின் கல்வியில் தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளும் பணியாற்ற வருகின்றனர். அதோடு அனைத்து துறைகளை சேர்ந்த அமைச்சர்களும் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.
மேலும் பேசுகையில்
தென் மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள் இல்லை என்றால் கல்வியே இல்லை என்ற நிலை உள்ளது.
குறிப்பாக தேடி திருநெல்வேலி மாவட்டங்களில் சிறுபான்மை சமூகத்தினரே கல்வி சேவையில் ஈடுபட்டு வருவதாக பெருமை பட பேசினார்.
இதில் கலந்துகொண்டு பேசிய கருத்துரையாளர்கள் இன்றைய காலச் சூழலில் கல்வியை எப்படி நாம் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வை ஆசிரியர்களை மட்டுமே நம்பி போகிறார்கள் எனவே அவர்களை சிறந்த உருவாக்க ஆசிரியர்களாகிய நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்தும், கல்வியின் நோக்கமே பாரபட்சம் இல்லாமல் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எல்லாமும் எல்லாருக்கும் என்பதே கல்வியின் முதன்மை குறிக்கோள் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது.