தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் இரண்டாம் நிலை சார்ந்த இணை இயக்குனர் பணியிடங்களில் நிர்வாக நலன் கருதி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு:
தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குனர்(நிர்வாகம்) ச. சுகன்யா மாநில் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனராக(நிர்வாகம்) மாற்றப்பட்டார்.
மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் ச. கோபிதாஸ், தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குனராக(நிர்வாகம்) மாற்றப்பட்டார்.
மாநில கல்விவியல் ஆராய்டச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அ. ஞானகவுரி, மேல்நிலைக்கல்வி இணைய இயக்குனராக மாற்றப்பட்டார்.
தொடக்க கல்வி இயக்கக( உதவி பெறுபவை) இணை இயக்குனர் க. ஸ்ரீதேவி, ஆசிரியர் தோ்வு வாரிய இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குனர் செ. சாந்தி, தொடக்க கல்வி இயக்ககம்(உதவி பெறுபவை) இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
தொழில் கல்வி இயக்கக இணை இயக்குனர் எம். ராமகிருஷ்ணன் தனியார் பள்ளி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
மதுரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் வெ. ஜெயக்குமார், தொழிற்கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் கே. முனுசாமி, மதுரை கள்ளர் சீரலமைப்பு பள்ளிகளின் இணை இயக்குநராக மாற்றப்பட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ந. ஆனந்தி, புதிய பணியிடமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.