தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் இன்று முடக்கப்பட்டது. அதனை முடக்கிய மர்ம நபர்கள் முகநூல் பக்கத்தில் நடிகர் விஜயின் திரைப்பட காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரித்து வருவதுடன் இது குறித்து சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
