பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை இன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சா் சகோதரர் மா.மதிவேந்தன் அவர்களுடன் இணைந்து, கரூர் மாவட்டம்,
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, வெள்ளியணை ஊராட்சி, ஜல்லிப்பட்டியில் துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளை சந்தித்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம் செய்தனர்.