ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒரே நிர்வாகத்தின் கீழ் பல பள்ளிகள் இருந்தால், தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டுமென பழைய விதிமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கட்டாயமில்லை. சாரஸ் இணையதளம் மூலம் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
புதிய விதிமுறையில் செய்யப்பட்டுள்ள திருத்தம் 2026-2027ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசின் புதியகல்வி கொள்கைக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசின் என்.ஓ.சி தேவையில்லை என்ற அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே ஒரே நிர்வாகத்தின் கீழ் பல பள்ளிகள் இருந்தால், தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று பழைய விதிமுறை இருந்தது. இனி வரும் காலங்களில் ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.