தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் முதல் பருவ பயிற்சி நடந்தது. பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயமீனா, மணி கண்டன் தொடங்கி வைத்தனர். 6 கருத்தாளர்கள் பயிற்சியளித்தனர். இதில் பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் 104 பேர் பங்கேற்றனர். பயிற்சியை பால்ராஜ் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் முன்னிலை வகித்தார். பட விளக்கம்: தமிழ் நாடு அரசு பள்ளி கல்வித் துறைச் சார்பில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது.
பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…
- by Authour
