Skip to content

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூரில் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக 1500 ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயாகவும், உயர் ஆதரவு தொகை 1000 சேர்த்து 3000 வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக முதல்வர் கவனம் செலுத்தி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக மனு கொடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என கோஷம் எழுப்பினர்.

error: Content is protected !!