பெண் போலீசார் குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதால் சவுக்கு சங்கர் மே 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது காரில் கஞ்சா இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சவுக்கு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் சவுக்கு மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சென்னை போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர். தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் அறிவுரைக்கழகம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கையா என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் குண்டர் சட்டம் சரியானது என உறுதி செய்தனர். எனவே சவுக்கு சங்கர் 1 வருடம் சிறையில் இருப்பார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/சவுக்கன்-1-930x607.jpg)