பெண்போலீசாரை அவதூறாக பேசியது மற்றும் கஞ்சா வைத்திருந்தாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது கோவை, தேனி, சென்னை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது மட்டும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ள சென்னை போலீசார் இன்று சவுக்கு சங்கர் மீது குண்டார் சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். இதற்கான ஆவணங்களை சென்னை போலீசார் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.