பெண்காவலர்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு முறையே சென்னை புழல் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி கணக்கில், கடந்த சில மாதங்களில் ரூ.1.25 கோடி பரிவர்த்தனை நடந்திருப்பதை சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வங்கி கணக்கை முடக்கியுள்ள சைபர் க்ரைம் போலீசார் சங்கர் வைத்திருக்கும் மற்ற 3 வங்கி கணக்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.