திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜர் படுத்த நேற்று சவுக்கு சங்கரை பெண் போலீசார் திருச்சி அழைத்து வந்து திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது திருச்சி போலீசார் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணையை நாளை(அதாவது இ ன்று) ஒத்தி வைத்து நீதிபதி ஜெயபிரபா உத்தரவிட்டார். பின்னர் நேற்று இரவு சவுக்கு சங்கரை லால்குடி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். இன்று காலை லால்குடி சிறையில் இருந்து போலீசார் சவுக்கை அழைத்து வந்து திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீஸ் கஸ்டடிக்கு சவுக்கு சங்கர் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1 நாள் திருச்சி போலீசார் விசாரணை நடத்த நீதிபதி ஜெயபிரபா அனுமதியளித்தார்.