Skip to content
Home » சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதால் நீதிபதி பி.பி.பாலாஜியின் உத்தரவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோ, என ஊகிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கே மாற்ற வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியுள்ளதால், இந்த வழக்கை முடிவு செய்ய காவல்துறை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டியது அவசியமானது.

அப்போது இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், “தன்னை இருவர் சந்தித்து அழுத்தம் கொடுத்ததால் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுவதும் தவறானது” என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும்  இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதி  ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!