Skip to content
Home » சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி பாலைவனத்திற்கு முகமது ஷேசாத் சென்றார். 650 கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஏமன் வரை நீளமானது. இந்த பாலைவனத்திற்கு, முகமது ஷேசாத் கான் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வர வழி தெரியவில்லை. அவர் விடா முயற்சியாக 4 நாட்களாக போராடி பார்த்தார். அவரால் வீட்டுக்கு திரும்பி வரும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மணல் திட்டுகளில் டூவீலர் அருகே இறந்து கிடந்த முகமது ஷேசாத் கானின் உடல் மீட்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!