தமிழகத்தில் நேற்று 45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதன்படி காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி போலீஸ் கமிஷனராக இருக்கும் கார்த்திகேயன், திருச்சி மத்திய மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார்.
திருச்சியில் மாநகர காவல் ஆணையரகம் 1997ல் உருவாக்கப்பட்டது. 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தான் பெண் ஒருவர் கமிஷனராக திருச்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். சத்யபிரியா ஏற்கனவே திருச்சி மாநகர துணை கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.