Skip to content

2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு

புதுச்சோி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ  தர்பாரண்னேஸ்வரர் கோவில்  சனிபகவானின் தலமாகும்.  இங்கு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் பங்கேற்க  இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில் வரும்29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என பல  கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில்,  திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்னேஸ்வரர் கோவிலில் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது இங்கு வரும் 2026ல் தான் சனிப்பெயர்ச்சி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருநள்ளாறு தேவஸ்தான , தனி அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான சோமசேகர் அப்பா ராவ் உத்தரவின் பேரில், நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்டுள்ள செய்தியில்  கூறியிருப்பதாவது:

| திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம், அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலத்தில், வாக்கிய பஞ்சாங்கம்” முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ம் ஆண்டில் சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம்.
ஆகையினால் 29.03.2025 அன்று சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் இல்லை. அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
எனவே, பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!