Skip to content

திருநள்ளாறில், சனிப்பெயர்ச்சி விழா 2026 மார்ச் 6ம் தேதி நடைபெறும்

  • by Authour

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள  தர்பாரண்யேஸ்வரர் கோவில்  சனி பகவான் பரிகாரத் தலமாக  விளங்குகிறது. இங்கு சனி பகவான் தனி சன்னதிகொண்டு இருக்கிறார்.   இங்கு  நாள்தோறும் பக்தர்கள் வந்து சனிபகவானை தரிசித்து அங்குள்ள நளன் குளத்தில் நீராடிச் செல்கிறார்கள்.

இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா இங்கு நடைபெறும். அதன்படி வரும 2026ம் ஆண்டு  மார்ச் மாதம்  6ம் தேதி காலை 8.24 மணிக்கு  சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். அப்போது சனிபகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.  அன்றைய தினம்  திருநள்ளாறில் தேரோட்டமும் நடைபெறும்.

இதற்கான கொடியேற்று விழா வரும் மே மாதம் 23ம் தேதி நடைபெறும் என்று  கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!