Skip to content
Home » சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வடுகூட மாறாத  நிலையில் அதே பகுதியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீப்பற்றியது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் கிடங்கு  முற்றிலுமாக  எரிந்து நாசமானது.  இந்த வெடி விபத்தில் அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவர்  சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெடி பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடியது என்பதால் மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும். பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!