ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 2ம் தேதி மாலை சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருடன் ரயிலில் சென்னை எழும் பூருக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவுக்கு மேல் சதீஷ்கு மாரின் பாட்டி திடீரென மாயமாகியுள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் ரயில் டிக்கெட் பரிசோதகரான ஜெயவேலிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே ஜெயவேல் அனைத்து ரயில் நிலையங்க ளுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் பலனாக 3ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மாயமான சதீஷ்குமாரின் பாட்டி திருச்சியில் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டனர். அதன்பிறகு அவரை மற்றொரு ரயிலில் அழைத்து சென்று சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சதீஷ்குமார் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஜெய வேலை பாராட்டி இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அறிந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் டிக்கெட் பரிசோதகர் ஜெயவேலை பாராட்டி நற்பணிக்கான சான்றிதழ் வழங்கினார்.
மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….
- by Authour
