தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஏப்ரல் 15 ம் தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பணியாற்றிய டி. சதீஷ்குமார், திருச்சி மண்டல பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சதீஷ்குமார் வியாழக்கிழமை திருச்சி மண்டல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற பொதுமேலாளருக்கு போக்குவரத்துக்கழக பணியாளர்களும் அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சி மண்டல பொது மேலாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், மதுரை மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
