Skip to content
Home » சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

  • by Senthil

சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர். கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 1916ம் ஆண்டு டிசம்பர் முதல் 2017 செப்டம்பர் வரை கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்தார். வி.கே.சசிகலா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி பிறந்தார். இவரது கணவர் ம. நடராசன். நாளை சசிகலாவின் 69ஆவது பிறந்த

நாளை முன்னிட்டு இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் ஒத்தக்கடை செந்தில் தலைமையில் சசிகலாவின் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, மரக்கன்றுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் நாமக்கல் கோபால் அசோக்குமார், குமார், தன்ராஜ், ஆறுமுகம், சரவணன், சிவா, முனியாண்டி உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!