வீட்டு வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று அதி்முகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை அவுரித்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. எஸ். மணியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு தேர்தலுக்கு பிறகு அமைகிற புதிய அரசுதான் புதிய நிதி நிலையை அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவித்தவர் பல்வேறு பிராந்திய கட்சிகள் இருக்கிற நாடு இது என்பதால் தேர்தலுக்கு பிறகுதான் பிரதமர் யார் என்று தேர்ந்தெடுப்போம். சிறுபான்மையினருக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினர்தான் முதலில் நிற்போம், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்தது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அதற்கு பதிலளிக்காமல் கூட்டணி குறித்தும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரத்தால் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறுவோம் என பதில் கூறினார். தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுவில் இணையுமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என நழுவினார்.
அதிமுக ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சசிகலா கூறியுள்ளாரே என்று கேட்டபோது, அதிமுக தங்கம் போன்றது. பிரிந்து சென்றவர்கள் நகை செய்யும் போது ஆகும் சேதராம் போன்றவர்கள் என ஓபிஎஸ், பதிலளித்தார்.