அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்து வருகிறார். ஒரு சில வழக்குகளை தவிர மற்றவற்றில் இபிஎஸ்க்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டுள்ள ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு ஒன்றை நடத்துகிறார். 24-ம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு மாநகர போலீசார் மற்றும் ரயில்வே நிர்வாகத்தினரிடம் ஓபிஎஸ் தரப்பினர் அனுமதி வாங்கியுள்ளனர். இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வார் என எதிபார்க்கப்படுகிறது. . இந்த நிலையில் நாளை மாலை திருச்சி பிரீஸ் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொள்கிறார்..
