கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக, நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் நிகழ்ச்சியில் இன்ஸ்பிரேஷன் க்ரு விருதுகள் 2024 எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.
இதனை தொடர்த்து இன்றைய
சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கல்வியாளர்களுக்கு பாராட்டுவிழாவும், இணையதள காணொளி காட்சி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான டாக்டர். சசி தரூர், எழுதிய ஏ வொண்டர்லேன்ட் ஆப் வேர்ட்ஸ் அரோவ்ண்ட் தி வேர்டு இன் 101 எஸ்சேஸ் என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இ
இதனை தொடர்ந்து புகழ் பெற்ற பத்திரிகையாளரும், லூசிட் லைன்ஸின் நிறுவனருமான ஷோமா சௌத்ரி சசிதரூருடன் இணைய வழியில் கலந்துரையாடினார்.
சிந்தனைத் தலைமையின் மூலம் ஒரு நெகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடினார். இதனையடுத்து, இன்றைய இன்ஸ்பிரேஷன் க்ரு விருதுகள் வழங்கப்பட்டது .
சென்னையை சேர்ந்த தி வேலம்மாள் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் கோதண்டராமன் முதல் பரிசை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் கேனரி தி பள்ளியைச் சேர்ந்த லிடியா கிறிஸ்டினா,மற்றும் கணேஷ் ஆகியோருக்கு இரண்டாம் பரிசும் வழங்கபட்டது. தொடர்ந்து பல்வேறு சிறந்த கருத்துக்களை முன்வைத்த மாணவ மாணவியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்எஸ்விஎம் கல்வி குழும நிறுவனங்களின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், பிரபல சமையல் கலைஞர் ராகேஷ் ரகுநாதன், மற்றும் மாணவ மாணவியர் என பலரும் கலந்து கொண்டனர்.