சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் விழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை இயக்குனர் லட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலையிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை புகையிலை உடல் நலத்திற்கு கேடு, புகையிலை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும், என
எழுத்துகள் பொருந்திய பதாதைகளை ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர். மேலும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி உள்ள குடும்பத்தினர், பொதுமக்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.