பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பதான் படம் பாதியில் நிறுத்தபட்டுள்ளது. PVR cinema தொழில்நுட்பகோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டது. பத்திரிக்கையாளர்களும் படம் பார்க்க வந்த
பொதுமக்களும் தியேட்டர் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இப்பேது வரை படம் ஆரம்பிக்கவில்லை எனவும் படம் பார்க்க வந்த ரசிகர்கள் நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.