தஞ்சை மாவட்டம் பாபனாசம் ஒன்றியம் திருமங்களங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைமுதலாளியின் மோசடியை கண்டித்து 30 நவம்பர் முதல் அந்த ஆலைக்கு கரும்பு கொடுத்து வந்த விவசாயிகள் ஆலையின் முன்னேதொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்குகொண்டு ஆதரவு தெரிவித்தது. ஆலை நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை அடமானம் வைத்து வங்கிகளில் கரும்பு சாகுபடிக்காக பெற்ற சுமார் 300கோடி ரூபாய் கடன் தொகையையும் திருப்பி செலுத்தாது விவசாயிகளை ஏமாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆலையை ஹால்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இதன்பின்மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில்.. கரும்பு பணம் பாக்கியில் 57சதம்தொகைமட்டு மே வரும் ஒரு வருடத்திற்குள் நான்கு தவணைகளாக கொடுக்கப்படும்… வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்பாக்கிஎங்களுக்கு பொறுப்பு இல்லை என்று புதிய நிர்வாகம் கூறிய நிலையில் போராட்டம் தொடர்கிறது. இதன்உரிமையாளர் வாரன்ஆண்டர்சன் அமெரிக்காவில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு வராமல் இந்த ஆலையை விற்பனைசெய்துவிட்டார். நீதிமன்றமோ இந்த கம்பெனியை வாங்கிய நிர்வாகமே இதற்குரிய இழப்பீட்டை கொடுக்க பொறுப்பாகும் என தீர்ப்பளித்தது. சாதாரணமாக கிராமங்களில் நிலம் வாங்குகிற போது விற்ற இடத்தில் ஏதும் வில்லங்கம்ஏற்பட்டால்.. தானே பொறுப்பு என எழுதி கொடுத்து ஈடு செய்யும்நடைமுறை இன்றைக்கும் உள்ளதே. இவை எதையும் பின்பற்றாது திட்டமிட்டு மோசடி செய்த இந்த நபர் மீது உரிய குற்றவியல்நடவடிக்கை எடுத்திடவேண்டும். இந்த ஆலையை அரசேஏற்று நடத்திட வேண்டும். இதன் மூலம் வங்கிகளுக்கு சேர வேண்டிய 300 கோடிரூபாயை அரசே திருப்பி செலுத்தி… விவசாயிகளை சிபில் ஸ்கோர்பிரச்சனையிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டியபாக்கி தொகை 85கோடியை வட்டியுடன் அரசே வழங்கிட வேண்டும் என்ற இவர்களின்கோரிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டுமாய் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்கேட்டுக்கொள்கிறோம்.