பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் C.வேலுமணி தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் லதா மற்றும் அவரது குழுவினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுசாரயம் விற்பனை மற்றும் தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்களை தேடி சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 13.01.2024ம் தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வி.களத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பலூர் வீரமுத்து காட்டு கொட்டகை அருகில் அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்துகொண்டிருந்த
தங்கவேல் (54) த/பெ முத்துசாமி வடக்கு காட்டு கொட்டகை, பசும்பலூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம். என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 லிட்டர் நாட்டு சாராயத்தையும் 50 லிட்டர் சாராய ஊறலையும் கைப்பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி அதனை அங்கேயே அழித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.