Skip to content
Home » சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

  • by Senthil

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார், கடைசியாக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர தி ஸ்மைல் மேன், ஆழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 Aazhi

இதில் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆழி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார் நடித்துள்ளார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெஸ்சி என்பவர் இசையமைத்து வருகிறார். 888 புரொக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிரட்டலான லுக்கில் சரத்குமார் உள்ளார். இந்த ஃப்ர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!