திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆலம்பட்டி அருகே பூலாங்குளத்துப்பட்டி பகுதி பள்ளப்பட்டியை சோந்த சக்திவேல் (49). இவர் கார் டிரைவர். மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் முயற்சியில் மது குடிக்கக் கூடாது என கூறி சக்திவேலை கட்டுப்படுத்தி வைத்திருந்தனா். இதனால் கடந்த சில நாட்களாக மது அருந்தாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த சக்திவேல் திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர் .அப்போது அவரது சகோதரா் சண்முகம் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரின் குடும்பத்தாரிடம் போலீசாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.