Skip to content
Home » கில மனசுல இருக்கும் சாரா யார்? ரசிகர்களின் பாடல் வைரல்

கில மனசுல இருக்கும் சாரா யார்? ரசிகர்களின் பாடல் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் இலங்கைக்கு  எதிரான ஆட்டத்தில், தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை அடித்து, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். நேற்று முந்தினம் நடைபெற்ற இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் தெண்டுல்கரின் 24 வருட சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார்.நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது. இதனை 1999-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹேடன் 181 ரன்களும், கேலகன் 169 ரன்களும் முன்னாக எடுத்திருந்தனர். இவை அனைத்தையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகிய இருவருடனும் சுப்மான் கில் கடந்த காலத்தில் டேட்டிங்கில் இருந்தார். ஆனால் சுப்மான் கில் தற்போது இருவரில் யாருடன் நட்பில் இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. நேற்று முன்தின போட்டியின் போது கில் எல்லை கோட்டிற்கு அருகில் பீல்டிங் செய்யும் போது ரசிகர்கள் சாரா சாரா என கோஷமிட்டனர். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பிரிவு ரசிகர்கள் “சாரா, சாரா” என்று கோஷமிடுவதைக் கேட்கலாம், ஆனால் கில் அதை பொருடபடுத்தாமல் விளையாடினார்.

நடிகை சாரா அலி கான் கடந்த ஆண்டு இளம் கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் உடன் டேட்டிங் செய்து வருவதாக வதந்தி பரவி வருகிறது, இப்போது கூட்டத்தினர் கூட இருவரையும் ஒன்று சேர்த்துவைக்க ஆர்வமாக உள்ளனர். சாரா அலி கான் நடிகர்கள் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள். இவர் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியும் ஆவார். அவர் 2017-ல் கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் சிம்பா மற்றும் லவ் ஆஜ் கல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனையடுத்து, இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், நான் இப்போதும் தனி ஆளாகத் தான் இருக்கிறேன் என கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்தார். அதனையடுத்து இருவர் குறித்தும் எந்த தகவலும் வருவதில்லை.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு, பஞ்சாபி நடிகை சோனம் பஜ்வா, கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் புள்ளிகளை இணைத்து அவர்களுக்கு இடையே ஒரு காதல் கதையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். . சேவியர் அங்கிள் என்ற டுவிட்டர் பயனர், சோனம் மற்றும் ஷுப்மான் இடையே கைகுலுக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார், மேலும் இதுவே கில்லின் சதங்களுக்குப் பின்னால் உள்ள காரணம் என்று குறிப்பிட்டார். அந்த டுவீட்டுக்கு பதிலளித்த சோனம் பஜ்வா, அது அனைத்தும் பொய் என்று தனது டுவீட்டில் சாராவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அவர் நேரடியாக சாரா அலி கானைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது டுவீட் ‘சாரா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *