திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பாணி என்பவர் கைது செய்யப்பட்டார். சப்பானியிடம் போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் நகைக்காக 2012-ம் ஆண்டு முதல் வெவ்வேறு காலகட்டங்களில் அவரது தந்தை தேக்கன்(75) கோகிலா(70), அற்புதசாமி(70), விஜய் விக்டர்(27), சத்தியநாதன்(45), பெரியசாமி(75), குமரேசன்(50), தங்கதுரை(35) உள்பட 8 பேரை கொலை செய்த அதிர்ச்சிகரமான செயல் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி பாபு தன் தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சப்பாணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சப்பாணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 வழக்குகளில் ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 3 வழக்குகள் திருச்சி கோர்ட்டில்ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.