ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சாந்தனும் ஒருவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு சிறைவாசிகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் சாந்தன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.