ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தி வருகிறார். பாலிவுட்டில் திடீரென இளம் கதாநாயகிகளே படு கவர்ச்சி உடைகளில் நடிக்க ஆரம்பித்ததும் சன்னி லியோனின் மார்க்கெட் பெருமளவில் சரியத் தொடங்கின.
ஆனாலும் சன்னி லியோன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படத்தை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.மும்பையில் வீடு வாங்கி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் சன்னி, தனது படுக்கையறையில் இருந்து வீடியோ ஒன்று எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். உதட்டில் காயம் அடைந்த நடிகை இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அவளுடைய உதடு காயத்திற்கு ஒரு விசித்திரமான காரணம் இருக்கிறது. சன்னி லியோனின் உதடு காயத்திற்கு காரணம் மொபைலே தவிர, வேறு இல்லை. அவர் மொபைல் போனை செல்பி செடுக்க மேலே தூக்கி பிடிக்கும் போது அது நழுவி அவர் முகத்தில் விழுந்தது. அது உதட்டில் விழுந்ததால் பலமாக அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதை நடிகையே பதிவு செய்துள்ளார். வீடியோவில், சன்னி தனது கணவர் டேனியல் எனது வலியை பொருட்படுத்தாமல் அமைதியாக தூங்குவதைக் காட்டினார்.