Skip to content

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி 3 நாட்களாக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாதவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு கேட்டுகள் மூடப்பட்டு பேரிகாடுகள் வைத்து பாதுகாப்பு அரன் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர் இதனால்

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முகப்பு கேட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாளைக்கு சம்பளம் ரூபாய் 638 வழங்காமல் ரூபாய் 390 குறைவாகவும், காலதாமதமாக வழங்குவதை கண்டித்தும்,
அரசாணை எண் 62 இன்படி நாளொன்றுக்கு 628 ரூபாய் சம்பளம் வழங்க கோரியும், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையை வழங்க வலியுறுத்தியும், பணியின் போது பயன்படுத்த கையுறை,காலுறை, முக கவசம் மற்றும் தரமான வாகனங்கள் வழங்க வேண்டும், கொரோனா பெருந்தொற்றின் போது பணியாற்றியதற்கான சிறப்பு ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!