திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, தில தீப வழிபாடு நடைபெறும். திருநள்ளாறில் நாளை நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.